மீனவர்களுக்கு எச்சரிக்கை: வானிலை மையம்!

கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.


இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் ஜூன் 28 (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ளதாவது, வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கவனமாக கடலுக்குள் செல்ல வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும், தென்மேற்கு திசையில் இருந்து பலத்த காற்று வீசும் என்றும், குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 3.5 மீட்டர் முதல் 4.2 மீட்டர் வரை கடல் அலைகள் எழும் என்றும் எச்சரித்துள்ளது.

வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை, தேவாலா மற்றும் சின்னக்கல்லார் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.