கனடாவில் திட்டமிட்டு கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்!

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞனின் மரணம் தொடர்பில்
டொரண்டோ பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்காபுரோ பகுதியில் வைத்து 21 வயதான வினோஜன் சுதேசன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவர் தீவிரமாக இலக்கு வைத்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுதேசனுக்காக காத்திருந்த சந்தேகநபரை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்ததாக கொலை தொடர்பாக புலனாய்வு செய்யும் Andy Singh தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் சுதேசன் மீது பல முறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார் எனவும் அந்த இடத்திலேயே சுதேசன் கீழே விழுந்துள்ளார்.

ஸ்காபுரோ Lester B. Pearson கல்லூரிக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் சுதேசன் மீட்கப்பட்டார். பின்னர் அவர் அவ்விடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

ரொரண்டோ மாவட்ட கல்லூரியில் வழங்கப்பட்ட கண்காணிப்பு வீடியோ மூலம், பொலிஸார் சந்தேகநபர் தொடர்பான விபரங்களை பெற்றுள்ளனர். துப்பாக்கி தாங்கிய நபர் ஒருவர் பாடசாலையின் தென் பகுதிக்கு ஓடியுள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் கறுப்பினத்தவர் எனவும், சுமார் 5 அடி 10 அங்குலமுடையவர் எனவும், அவர் காக்கி நிற காற்சட்டை அணிந்து வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தார் எனவும் புலனாய்வாளர் Andy Singh குறிப்பிட்டுள்ளார்.

கொலை இடம்பெறுவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்னர் கறுப்பு நிற கார் ஒன்று கல்லூரியின் வாகன தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பகுதியிலேயே நீண்ட நேரமாக கார் வட்டமிட்டுள்ளது. எனினும் சம்பவம் இடம்பெறும் போது அந்த காரினை குறித்த பகுதியில் காணவில்லை என அவர் கூறியுள்ளார்.

சுதேசன் இலக்கு வைக்கப்பட்டார் என பொலிஸார் நம்புகின்ற போதிலும், அது சந்தேகநபரின் தவறான அடையாளமாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

“சுதேசன் யாருடனும் பிரச்சினைக்கு செல்லாத ஒரு நல்ல மாணவர். ஏன் இப்படி நடந்ததென தெரியவில்லை. நான் நினைக்கின்றேன் அவரது கையடக்க தொலைபேசியை திருடுவதற்காகவும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கலாம். எனினும் விசாரணைகள் முடியும் வரை உண்மையான காரணம் தெரியவில்லை.. என சுதேசனின் உறவினர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.