கர்நாடக முதல்வரைச் சந்திக்க விஷால் முடிவு!

காலா திரைப்படத்துக்கு கர்நாடகவில் தடை விதிக்கப்பட்டுள்ளது
தொடர்பாக அந்த மாநில முதல்வரைச் சந்திக்க நடிகர் விஷால் முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியது: ரஜினியின் காலா படத்தைத் திரையிட கர்நாடகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகளிடம் இது குறித்துப் பேசியுள்ளோம். எங்களது கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாகக் கூறியுள்ளனர்.
சினிமா வேறு அரசியல் வேறு. காலா படம் ஒரு தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்டது என்பதை உணர வேண்டும். ரஜினி அரசியலுக்கு வருவது வேறு. இது தொடர்பாக கோரிக்கை வைக்க கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியைச் சந்திக்க முடிவெடுத்துள்ளோம். காலா படம் எல்லா இடங்களிலும் வெளியாக வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். 
காவிரி பிரச்னை குறித்துப் பேசுவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்து. அது ஒரு படம் திரையிடுவதைப் பாதிக்கக் கூடாது.
Powered by Blogger.