கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரு பெண்கள் கொலை!

கொஸ்கம, வெரெல்லமண்டிய பகுதியில்
உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

இன்று (02) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

34 மற்றும் 78 வயதுடைய பெண்கள் இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் கொஸ்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.