மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!

வெலிவேரிய, ஹெல்வல பகுதியில் இடம்பெற்ற
விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மோட்டார் சைக்கிள் ஒன்று லொறி ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது லொறியின் சக்கரத்தில் சிக்குண்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்தில் பலத்த காயமடைந்த நபரை கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். 

கிதுல்கல, மல்வத்த பகுதியை சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெலிவேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.