மனம் திறந்த ராதிகா ஆப்தே!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்த ராதிகா ஆப்தே தான் ஆபாசப் படங்களில் நடித்ததற்குப் பணத் தேவையே காரணம் எனத் தெரிவித்திருக்கிறார்.


பாலிவுட்டில் சின்னக் கதாபாத்திரம் மூலம் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. அந்தப் படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் தொடர்ச்சியாகத் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அவர் பெற்றார். தற்போது இந்தி தவிர தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், பெங்காலி ஆகிய மொழி படங்களில் பிஸியாகி இயங்கி வருகிறார். திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் நாடகம், குறும்படங்கள் எனப் பலவற்றிலும் தன்னை ஈடுபடுத்திவருகிறார். 2016ஆம் ஆண்டு தமிழில் ரஜினிகாந்துடன் இணைந்து கபாலி திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

மேலும், ஆரம்ப கட்டத்தில் ஆபாசப் படங்களில் நடித்தது குறித்து ராதிகா ஆப்தே முதன்முறையாக மனம் திறந்திருக்கிறார். “நல்ல பேக் கிரவுண்டுடன் திரைத்துறையில் என்ட்ரி கொடுப்பவர்களுக்கு வாய்ப்புகள் எளிதாகக் கிடைத்துவிடுகின்றன. அப்படி இல்லாமல் வருபவர்கள் கஷ்டப்படுகிறார்கள். நான் எந்தப் பின்னணியும் இல்லாமல்தான் நடிகையாக அறிமுகமானேன். நிறையக் கஷ்டங்களைச் சந்தித்தேன். அதை என்னால் தவிர்க்க முடியவில்லை.

நடிகையானபோது எது போன்ற படங்களில் நடிக்கக் கூடாது என நினைத்திருந்தேனோ அந்தப் படங்களில்தான் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதில் வரும் பணம் என் வாழ்வாதாரத்திற்கு உதவியது. அதுபோன்ற மோசமான படங்களை என்னால் தவிர்க்க முடியாமல் போய் விட்டது. இப்போது எனக்குப் பெயர் புகழ் கிடைத்து விட்டது. நிறைய பட வாய்ப்புகளும் வருகின்றன. இதனால் எல்லாக் கதைகளுக்கும் ஒப்புக்கொள்ளாமல் எனக்குப் பிடித்த கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார் ராதிகா ஆப்தே.
Powered by Blogger.