தடை விதித்த ட்ரம்ப்!

இஸ்லாமிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ட்ரம்ப் தடை விதித்திருந்த நிலையில், ட்ரம்பின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக
இன்று (ஜூன் 27) தீர்ப்பளித்த உச்ச நீதி மன்றம், முஸ்லீம்களுக்கு எதிரான பாரபட்சம் என்ற குற்றச்சாட்டையும் நிராகரித்துள்ளது.

ட்ரம்பின் தடை உத்தரவுக்கு எதிராக அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, தடை உத்தரவுக்கு இடைக்கால தடையும் பெறப்பட்டது. மேலும் இதை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் டிரம்ப் அறிவித்த பயணத் தடை சரியே எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது. 5 தலைமை நீதிபதிகள் கொண்ட அமர்வில் நான்கு நீதிபதிகள் டிரம்ப் அறிவிப்புக்குச் சாதகமாக தீர்ப்பு அளித்தனர்.

இந்தத் தடையானது முஸ்லிம்கள் மிகப் பெருமளவில் வசித்து வரும் ஈரான், லிபியா, சோமாலியா,சிரியா, யாமேன் போன்ற நாடுகளுக்கே பொருந்தும். இஸ்லாமிய நாடுகளில் ஆறாவது பெரிய நாடான சாட், தடை நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக ஏப்ரல் மாதம் ட்ரம்ப் தெரிவித்தார்.

இந்தத் தடையால் முஸ்லிம் அல்லாத அண்டை நாடுகளான வடகொரியா, வெனிசூலா போன்ற நாடுகளின் அதிகாரிகளும், குடும்பங்களும் பாதிக்கப்படுகின்றனர்.

ட்ரம்ப் நிர்வாகம், கடந்த வருடம் ஜனவரி மாதம் ஏழு நாடுகள் மீதான தடையை முதல் முறையாக அறிவித்தார். அப்போது ட்ரம்பின் தடை நடவடிக்கைகளை நீதிமன்றம் நிராகரித்து விடும் எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பானது பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.