வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு கிடைத்த அதிஷ்டம்!

வெளிநாட்டில் உள்ள 800 இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை
வழங்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் முதல் வாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
இரட்டை குடியுரிமைக்காக மாதாந்தம் 1000 விண்ணப்பங்கள் கிடைப்பதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டு ஜெனரால் நிஹால் ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
விசேட குழுவின் மூலம் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் பரிந்துரைக்கு அமைய 800 பேருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படவுள்ளதாக திரு. நிஹால் ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இரட்டை குடியுரிமையை பெற்றுக் கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வருவதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்ஹ தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.