நம்பிக்கைதரு மாற்றங்கள் மீளவும் நாம் செழிப்போம்!

தமிழர்கள் என்றாலே கல்வியிலும் கலைகளிலும் தலைசிறந்தவர்கள் என்ற மறுஅர்த்தம் உண்டு. காலப்பேரிடர்களில் இவ்வினம் அகப்பட்டதனால்தான் என்னவோ,
இந்தத் துறைகளில் வீழ்ச்சிகளும் ஏற்பட்டன. ஆனால் அண்மைக்காலத்தில் ஆங்காங்கே நம் கல்வி துறைகளில் ஏற்படும் நம்பிக்கைதரு மாற்றங்கள் மீளவும் நாம் செழிப்போம் என்ற நம்பிக்கையைத் தருகின்றது.
அந்தவகையில் போரின் மிக உக்கிரமான அழிவுகளைச் சந்தித்த புதுக்குடியிருப்பு மண்ணிலிருந்து புதிய கல்வி, கற்றல், கற்பித்தல் பாரம்பரியம் ஒன்று உருவாகிறது. பொருத்தமான ஆளுமையும் அறிவும் கொண்ட அதிபர், ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும் Smar Class Room எனப்படும் நவீன கற்றல், கற்பித்தல் முறைமை குழந்தைகளிடம் அதீத ஈர்ப்பை பெற்றிருக்கிறது. அக் கல்வி மரபு பற்றிய காணொலியை உங்கள் முன் கொண்டுவருகின்றோம். இந்தச் செய்தி நம் ஊர்கள், நாம் செறிந்து வாழும் தேசங்கள் எங்கனும் வியாபிக்க பகிர்ந்துதவுங்கள்
Powered by Blogger.