மக்களின் காணிகளை மீண்டும் பெற்றுத்தருவோம்!

யுத்த காலத்தின் போது நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி கைப்பற்றப்பட்ட மக்களின் காணிகளை மீண்டும் பெற்றுத்தருவோம் என இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி மக்களிடம் இருந்து கைப்பற்றிய காணிகளை படிப்படியாக உரிய மக்களுக்கு பெற்றுத் தருவோம்.

பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் வடக்கு, தெற்கு என்ற பேதம் இல்லாது அனைவருக்குமான சேவைகள் முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையின் கீழ் இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

இதேவேளை, காணி விடுவிப்பது குறித்து இந்த வாரமும் நிதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு பிரதானிகள் மத்தியில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.