மாவீரர்-பிரபாகரனிடமே வரைவிலக்கணம்!

ஏழுநாட்டு ஏகாதிபத்திய ராணுவத்தை எதிர்கொண்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் மாவீரர் என்றால் யார் என்று கேட்கப்பட்டபோது, எவர் தனது லட்சியத்தில் வென்றிருப்பாரோ, எவர் அந்த லட்சியத்துக்காக உயிரைக் கொடுத்தாராரோ அவரே உண்மையான மாவீரர் என்று பதில் சொன்னார். அந்த அடிப்படையில் தனது லட்சியத்துக்காக வென்றும் அதற்காக உயிரையும் கொடுத்த ஸ்நோலின் தான் உண்மையான மாவீரரேயென தெரிவித்துள்ளார் ஜீனியர் விகடன் ஆசிரியர் திருமாவேலன்.
இன்னொரு இருபது ஆண்டுகள் கழித்து அவர் வேலுநாச்சியாகவோ குயிலியாகவோ மணலூர் மணியம்மையாகவோ மலர்ந்திருப்பார், அதனால் தான் அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார். அவரது வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் நினைக்க நினைக்க இந்த வலி குறையாது.
இங்கே மேடையில் பெரியார், அம்பேத்கர், லெனின் ஆகியோர் சிலைகளாக இருக்கிறார்கள். இந்தக் கூட்டணிதான் வெல்லும் கூட்டணி. இந்தக் கூட்டணியின் மூலமாகத்தான் வகுப்புவாதத்தை வெல்ல முடியும். அதுவே உண்மையான அஞ்சலியெனவும் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/watch?v=-jN8PBCBA0w&feature=youtu.be
தூத்துக்குடி மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடிய காரணத்தால் காவல்துiறையால் சுட்டுக்கொல்லப்பட்ட ஸ்நோலின் எழுதிய கவிதைகளை ‘ஸ்நோலின் நாட்குறிப்புகள்’ என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 14வது மாநில மாநாடு புதுவையில் கடந்த 23ம் நாள் நடந்தது. அதில் இந்தப் புத்தகத்தை ஜீனியர் விகடன் ஆசிரியர் திருமாவேலன் வெளியிட பூவுலகின் நண்பர்களில் ஒருவருமான பொறியாளர் சுந்தர்ராஜன் பெற்றுக்கொண்டார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.