`ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை..!’

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடித்த `தமிழ் படம்’ அனைவராலும் பேசப்பட்டது. இந்நிலையில், 8 வருடம் கழித்து அந்தப் படத்தின் அடுத்த
பாகத்தை 'தமிழ்ப் படம் 2.0' என்ற பெயரில் வெளியாக இருந்தது. ஆனால், திடீரென்று படத்தின் தலைப்பை 'தமிழ்ப் படம் 2' என்று மாற்றினர்.விஜய், அஜித் போன்ற ஹீரோக்களின் படங்களைக் கலாய்த்து வெளிவந்த ஃபர்ஸ்ட் லுக், டீஸர் என அனைத்தும் இணையத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் பாடல் ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கிறது படக்குழு. `நான் யாருமில்லை' என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலில் ரஜினி, கமல் விஜய், அஜித், சிம்பு, விஷால், சிவாகார்த்திகேயன் என அனைவரையும் பாரபட்சமே பார்க்காமல் கலாய்த்துள்ளனர். பாடல் வெளியன சில நிமிடங்களிலேயே 50,000-க்கும் மேற்பட்ட வியூஸ்களைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. 
Powered by Blogger.