பிரதமர் அதிகாரிகளுக்கு விடுத்துள் முக்கிய உத்தரவு!

காலி மரபுரிமைக்கு பங்கம் எற்படுத்தும் அனைத்து சட்டவிரோத
கட்டடங்களையும் அகற்றுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
காலி மரபுரிமைக்கு பங்கம் ஏற்படுத்தும் பொருத்தமற்ற கட்டடங்கள் தொடர்பான தீர்மானம் மிக்க பேச்சுவார்த்தையொன்று காலி அரும்பொருட்காட்சியக முன்றலில் இடம்பெற்றுள்ளது.
இதன்போதே பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். காலி கோட்டைக்குள் அமைந்துள்ள அனைத்து அரச நிறுவனங்களையும் அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உலக மரபுரிமையைப் பாதுகாத்து, அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதன் அவசியம் குறித்து பிரதமர் அங்கு சுட்டிக்காட்டினார்.
நகர திட்டமிடலுக்கு ஏற்பவே அரச நிறுவனங்களும் அமைக்கப்படவேண்டும். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனி சட்டம் இருக்கமுடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் அங்கு குறிப்பிட்டார்.
Powered by Blogger.