வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் மீண்டும் குழப்பம்!

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று இணைந்த பேருந்து சேவையை மேற்கொள்ள தனியார் பேருந்து சாரதிகள் சென்ற போது இ.போ.ச சாரதிகள் மற்றும் தனியார் பேருந்து சாரதிகளுக்கிடையில் முறுகல்  நிலை ஏற்பட்டது.

 இதனால் அங்கு  பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

 இன்று தொடக்கம் இணைந்த பேருந்து சேவை மேற்கொள்வதற்கான அறிவுறுத்தல் வட. மாகாணசபையினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.