மைத்திரியின் கூற்றை ஆராய மஹிந்த குழு நியமிப்பு

நாட்டில் அரசாங்கம் இல்லை என்பதை ஜனாதிபதியின் கூற்று உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அவரின் கூற்று தொடர்பில் ஆராய்ந்து உண்மைத் தன்மையை நாட்டுக்கு தெரியப்படுத்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப் பெரும தலைமையில் குழு அமைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஏற்பாடுசெய்த இப்தார் நிகழ்வு கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது.

அதன் பின்ர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன நேற்று வெளியிட்ட கருத்து தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாள் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையில் குழு ஒன்று அமைத்துள்ளோம்.

அக்குழு ஆராய்ந்து உண்மைத் தன்மையை நாட்டுக்கு வெளிப்படுத்தும். மேலும் ஜனாதிபதியின் அக்கருத்தின் மூலம் நாட்டில் அரசாங்ம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

இவ்வாறான நிலையில் நாட்டை முன்னோக்கி அபிவிருத்தியின்பால் இட்டுச் செல்ல முடியாது. ஆகவே உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்தி ஸ்தீரமான அரசாங்கத்ததை அமைக்க வேண்டும்.

மேலும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நான் ஹெலிகொப்டரில் பயணித்தமை பற்றியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.எனினும் நான் ஜனாதிபதியாக பதவி வகித்துக்கொண்டிருந்த போதே கொழும்பிலிருந்து ஹெலிகொப்டரில் பயணித்தேன். அதாவது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னரே நான் கொழும்பிலிருந்து பயணித்தேன். புதிய ஜனாதிபதி பதவியேற்கும் வரையில் முன்னையவர் பதவியில் இருப்பார்.

மேலும் அரசியலமைப்பின் இருபதாவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்காமலிப்பதற்கு கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

No comments

Powered by Blogger.