சொத்தைப்பல்...!


💦💦💦💦💦💦💦


சந்தன மரங்களிலிருந்து
சாக்கடை நாற்றத்தைத் தேடுவீர்களா..
சிதறிய கோவில் தேங்காய்ச் சில்லுகளைச்
சிறுவர் ஓடிப் பொறுக்குதல் போல்


குறைகளைத்தேடிப் பொறுக்கிக் கொள்கிறீர்களே...
சுகந்தம் தரும் சூழலில் இருந்து
சூனியம் செய்யும் கிழவியாக
செந்நீரைத் தெளித்துக் கொண்டிருக்கிறீர்கள்...


சேவைகள் கூட உங்கள் பார்வைகளில்
சைத்தானின் அரண்மனை விரிப்புக்களாய்த்தான் தென்படுகின்றன...
சொத்தைப்பற்கள் உங்களிடமும் உண்டே
சோதனையை உங்களிடமிருந்தே
ஆரம்பியுங்கள்...
சொர்க்கம்தான்!

மகிழ்
சுவிட்சர்லாந்து
Powered by Blogger.