யாழில் தமிழீழ வரைபட அலங்கரிப்புடன் அம்பாள் வலம் வந்து காட்ச்சி!

யாழ்.ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் பூங்காவனத்திருவிழா இன்று
வெள்ளிக்கிழமை(29)பிற்பகல் சிறப்பாக இடம்பெற்றது.

ஆலய இந்துமகளிர் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இன்றைய பூங்காவனத் திருவிழாவை முன்னிட்டு அம்பாள் வெளிவீதியில் எழுந்தருளி வலம் வந்த போது பிரமாண்டமான முறையில் தமிழீழ வரைபடத்தால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அருட்காட்சி கொடுத்தார்.

இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண்பதற்காக வழமையைவிட இன்றைய தினம் அடியவர் கூட்டம் அதிகமாகவிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும். 
Powered by Blogger.