காட்டுப்புலம் மக்கள் ஆபத்தானவர்களாம்..! சுமந்திரன் போல் எனக்கு மேலதிக பாதுகாப்பு வேண்டுமாம் யானந்தி??

சுழிபுரம் - காட்டுப்புலம் பாண்டவெட்டை கிராமத்தில் ஆபத்தானவர்கள் வாழ்கிறார்கள். அங்கு நான் தனி யாகபோக
இயலாது. எனக்கு கூடுதல் பொலிஸாரு டைய பாதுகாப்பு வேண்டும்.

மேற்கண்டவாறு வடமாகாண மகளீர் விவகாரங்கள் அமைச்சர் அனந்தி சசிதரன் கூறியிருப்பதாக சமூக வலை தளங்களில் விமர்சனங்கள் எழுந்திருக்கின்ற து கொண்டிருக்கின்றது.

அமைச்சர் அனந்தி சசிதரன் கூறியுள்ளதாக வெளி யாகியுள்ள கருத்தாவது, காட்டுப்புலம் - பாண்டவெட்டை யில் ஆபத்தானவர்கள் வசிக்கின்றனர். அங்கு கஞ்சா கடத்தல், கசிப்பு உற்பத்தி, தவறணைக்குக் கொடுக்காமல் கள்ளு விற்பனை என்பன இடம்பெறுகின்றன. 

அங்கு தனியாகச் செல்ல முடியாது. எனக்கு இரு பொலிஸார் தான் பாதுகாப்புக்குத் தரப்பட்டுள்ளது. றெஜினா கொல்லப்பட்டமைக்கு அந்தச் சமூகம்தான் காரணம். இராணுவத்தால் றெஜினா கொல்லப்பட்டால் நான் உடனே அங்கு சென்றிருப்பேன்.

ஆனால் அங்குள்ள ஒருவரால்தான் அச்சிறுமி கொல்லப்பட்டார்.  
Powered by Blogger.