நயி­னா­தீவு நாக­பூ­சணி அம்­மன் ஆலய வரு­டாந்த உற்­ச­வ ஏற்ப்பாடுகள் தீவிரம்!

நயி­னா­தீவு நாக­பூ­சணி அம்­மன் ஆலய வரு­டாந்த உற்­ச­வம் எதிர்­வ­ரும் 14 ஆம் திகதி ஆரம்பமாக­வுள்­ள­தால் அதற்­கான போக்­கு­வ­ரத்து ஏற்­பா­டு­கள் ஒழுங்­க­மைக்­கப்­பட்­டுள்­ளது என்று யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லர் நாக­லிங்­கம் வேத­நா­ய­கன் தெரி­வித்­தார்.


நயி­னா­தீவு நாக­பூ­சணி அம்­மன் ஆலய வரு­டாந்த உற்­ச­வம் எதிர்­வ­ரும் 14 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ள­து­டன், ஆல­யத்­துக்­குச் செல்­லும் பக்­தர்­க­ளின் போக்­கு­வ­ரத்­துக்­கள் தொடர்­பான கலந்­து­ரை­யா­டல் நேற்று யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் செய­லர் வேத­நா­ய­கன் தலை­மை­யில் இடம்­பெற்­றது.

இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லில் நயி­னா­தீவு ஆலய நிர்­வா­கத்­தி­னர், பிர­தேச செய­லா­ளர்­கள், கடற்­படை, பொலி­ஸார் தனி­யார் மற்­றும் இலங்­கைப் போக்­கு­வ­ரத்­துச் சபை­யி­னர், படகு உரி­மை­யா­ளர்­கள், சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­தி­னர் எனப் பலர் கலந்­து­கொண்­டி­ருந்­த­னர். கலந்­து­ரை­யா­ட­லின் நிறை­வில் கருத்­துத்­தெ­ரி­வித்த மாவட்­டச் செய­லர் மேலும் தெரி­வித்­த­தா­வது;

எதிர்­வ­ரும் 14ஆம்் திக­தி­யி­லி­ருந்து 29ஆம் திகதி வரை காலை 5 மணி­மு­தல் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து பேருந்­து­கள் குறி­கட்­டு­வா­னுக்­குப் புறப்­ப­டும். காலை 6 மணி­மு­தல் குறி­கட்­டு­வா­னில் இருந்து பட­கு­கள் சேவை ஆரம்­பிக்­கப்­ப­டும். . மாலை 6 மணி­மு­தல் நயி­னா­தீ­வில் இருந்து பட­குச் சேவை­க­ளும், இரவு 7.30 மணி­மு­தல் குறி­கட்­டு­வா­னில் இருந்து யாழ்ப்­பா­ணம் நோக்­கிய பேருந்­துச் சேவை­க­ளும் இடம்­பெ­றும்.

பட­கு­கள் சரி­யான பரா­ம­ரிப்­புக்­குட்­ப­டுத்­து­வ­தற்­கான பரி­சீ­ல­னை­களை துறை­முக அதி­கார சபை­யி­னர் மேற்­கொள்­வார்­கள். பட­கில் ஏற்­றப்­ப­டும் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை, பட­கு­க­ளின் பயன்­பா­டு­கள் தொடர்­பில் துறை­முக அதி­கார சபை கவ­னத்­தில் எடுத்­துக்­கொள்­ளும். பட­கு­க­ளில் பய­ணிக்­கும் பய­ணி­கள் கட்­டா­ய­மாக உயிர்­காப்பு அங்­கி­கள் அணிய வேண்­டும்.

அதே­வேளை, சிறப்­புத் திரு­விழா நாள்­க­ளில் அதி­க­மான பேருந்­துச் சேவை­கள் மற்­றும் பட­கு­களை சேவை­யில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்­கான ஒழுங்­கு­கள் மேற்­கொள்­ளப்­ப­டும். எரி­பொ­ருள் விலை அதி­க­ரித்­துள்­ள­த­னால், படகு கட்­ட­ணம் அதி­க­ரிக்­கு­மாறு பட­குச் சேவை உரி­மை­யா­ளர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர். விலை நிர்­ணய கட்­டுப்­பாடு சபை­யு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லின் பின்­னர், பட­குக் கட்­ட­ணம் தொடர்­பாக அறி­விக்­கப்­ப­டும் –என்­றார். 
Powered by Blogger.