சுரேஷ்பிரமசந்திரன் மீண்டும் தமிழ்தேசியகூட்டமைப்பில் இணைக்கும் முயற்சி!

தமிழ்தேசியகூட்டமைப்பு தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் தற்போது உள்ள திருமலை மாவட்டம்
துரைரெட்ணசிங்கம்,முல்லைத்தீவு மாவட்டம் திருமதி சாந்தி ஶ்ரீஷ்கந்தராசா ஆகிய இருவருமே தொடர்ந்தும் பதவியில் இருப்பார்கள் என அறியமுடிகிறது.

இரண்டரை வருடம் தற்போது முடிவுறும் நிலையில் அந்த பதவிகளை தமக்கு வழங்க வேண்டும் என பலர் கேட்பதாகவும் அதில் கைவைத்தால் தற்போது பல சிக்கல்கள் ஏற்படும் என தமிழ்தேசியகூட்டமைப்பு தலைவர் சம்மந்தன் கருதுவதாகவும் தெரிகிறது.

குறிப்பாக யாழ்பாணத்தில் தமிழரசுகட்சி நிர்வாக செயலாளர் குலநாயகம் சிரேஷ்ட்ட தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம் தமக்கு வழங்கவேண்டும் என கேட்பதாகவும் பங்காளி கட்சியான TELO அதில் ஒரு பதவியை தமது கட்சிக்கு வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விட்டுள்ளனர் அதில் கல்முனை கென்றி மகேந்திரன் அம்பாறைமாவட்டம் கல்முனை தொகுதிக்கு தமக்கு தரவேண்டும் எனவும் மட்டக்களப்பு கோவிந்தன் கருணாகரம் பட்டிருப்பு தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இல்லை என்பதை காரணம் காட்டி தமக்கு தரவேண்டும் எனவும் அடம்பிடிக்கும் நிலையில் பட்டிருப்பு தொகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதாயின் அது தமிழரசுகட்சிக்கே வழங்க வேண்டும் என சிரேஷ்ட தலைவர் பொ.செல்வராசா கடந்த மத்தியகுழுகூட்டத்தில் வலியுறுத்தியதுடன் கடந்த உள்ளாராட்சி சபை தேர்தலில் இரண்டு சபைகளை TELO வுக்கு வழங்கியதால் தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதியில் ஆதிக்கம் குறைந்துள்ளதாகவும் அப்படி இருக்கும்போது தேசியபட்டியல் பிரதிநித்துவம் மேலும் TELO வுக்கு வழங்கினால் தமிழரசுகட்சி பட்டிருப்பு தொகுதியில் முழுமையாக செயல் இழந்துவிடும் அப்படியானால் அந்த பொறுப்பை சம்மந்தன் மாவைசேனாதிராசா சுமந்திரன் ஏற்கவேண்டும் என கூறப்பட்டதாகவும் தெரிகிறது.

இதேவேளை முல்லைத்தீவில் ஒரு பெண் பிரதிநித்துவத்தை இல்லாமல் செய்து ஒரு ஆண் பிரதிநித்துவத்தை அதிகரிப்பது தற்போதய நிலையில் சில சிக்கல்களை தோற்றுவிக்கும் எனவும் திருகோணமலை துரைரெட்ணசிங்கம் சம்மந்தரின் திருகோணமலை மாவட்ட வேலைகளை கையாழ்வற்காகவே நியமிக்கப்பட்டதாகவும் எதிர்வரும் மகாணசபை தேர்தலுக்கு இடையில் தேசியபட்டியல் விவகாரத்தில் தலையிட்டால் பல்வேறு விமர்சனங்களை எதிர்நோக்கும் என்பதால் தொடர்ந்தும் தற்போதுள்ள இருவரும் தேசியபட்டியல் உறுப்பினர்களாக இருப்பதே நல்லது என தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைமை கருதுவதாக அறியமுடிகிறது.

இதேவேளை தமிழ்தேசியகூட்டமைப்பில் இருந்து விலகிஉள்ள EPRLF சுரேஷ்பிரமசந்திரன் அணியை மீண்டும் தமிழ்தேசியகூட்டமைப்பில் இணைக்கும் முயற்சியினை TELO செல்வம் அடைக்கலநாதன் மேற்கொண்டுவருவதாகவும் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் மீண்டும் சுரேஷ்பிரமசந்திரன் அணி உள்வாங்கப்படலாம் எனவும் நம்பகமாக அறியமுடிகிறது அப்படி தான் இணைவதானால் ஏற்கனவே கூறியபடி தமக்கு தேசியபட்டியல் தரவேண்டும் என சுரேஷ் பிரமச்சந்திரன் தெரிவித்ததாகவும் அந்த நிபந்தனையை அடியோடு சுமந்திரன் நிராகரித்துள்ளதாகவும்

தற்போதைக்கு தேசிய பட்டியலில் கைவைத்தால் சாதகங்களைவிட பாதகங்களே அதிகம் இருப்பதாகவும் சுமந்திரன் சம்மந்தரிடம் காதோடு காதாக கூறியதாகவும் தெரிகிறது.

இந்தவிடயங்களை பார்க்கும் போது தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக ஏற்கனவே உள்ள திருமலை துரைரெட்ணசிங்கமும் முல்லைத்தீவு சாந்தி சிறிஷ்கந்தராசாவும் தொடர்ந்தும் இருப்பார்கள் என்பதே உண்மை. 

No comments

Powered by Blogger.