சுழிபுரம் சிறுமி கொலையில் நீதி தன்மையும் நால்வர் பிணை விடுதலையும்!

யாழில்  சுழிபுரத்தில் 6 வயதுச் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 பேரில் 4 பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்படவுள்ளனர்.


சிறுமியைக் கொலை செய்தது தான் மட்டுமே என ஏற்றுக்கொண்ட இளைஞன் மட்டும் நீதிவான் முன்னிலையில் இன்று முற்படுத்தப்படவுள்ளார்.

குற்ற ஒப்புதல் வாக்குமூலமளித்தவர் சிறுமியின் சிறிய தந்தையின் மகனான உறவுமுறைச் சகோதரனாவார். 22 வயது நிரம்பிய அவரை கிராம மக்களே அடையாளம் காண்பித்தனர்.

ஆசையில் ஆடைகளை களைந்தேன். பிள்ளை சத்தம் போட்டதால் கொலை செய்தேன் என்று சந்தேகநபர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
Powered by Blogger.