”காலா” படத்தின் கதையும், கமலின் ”நாயகன்” பட கதையும் ஒன்றா?

ரஜினியின் காலா திரைப்படம் தற்போது கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் இந்த

திரைப்படத்திற்கு, தொடக்கத்தில் ரஜினி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் இப்போது அந்த வரவேற்பு எதிர்ப்பாக மாறி இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் ரஜினி-ன் அரசியல் பிரவேசமும், சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியும் தான்.
தூத்துக்குடியில் 13 மக்கள் பரிதாபகரமாக பலியாகியதற்கு யார் காரணம்? என பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ”சமூக விரோதிகள்” என்று பா.ஜகவினர் போல பொறுப்பற்ற பதில் கூறியதுடன், ”போராட்டம் போராட்டம்னு போனா நாடே சுடுகாடாகிடும்” என அவர் கூறியது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால் காலா திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட விடமாட்டோம். என தமிழக மக்கள் இப்போது தெரிவித்து இருக்கின்றனர். மேலும் நாங்க தான் காலாவை முதலில் ரிலீஸ் செய்வோம் என்று தமிழ் ராக்கர்ஸ் வேறு, காலா படக்குழுவிற்கு சவால் விட்டிருக்கிறது. இதனிடையே தற்போது அமெரிக்காவில் இருக்கும் சினிமா தியேட்டரின் இணையதளம் ஒன்றில், காலா படத்தின் கதை சுருக்கம் வெளியாகி இருக்கிறது.
அதன் படி சிறுவயதில் திருநெல்வேலியில் இருந்து மும்பை செல்லும் காலா, அப்பகுதி டானாக வளர்ந்து அப்பகுதி மக்களுக்காக போராடுகிறார். இது தான் கதையாம். அப்போ படத்துல போராடுனா நாடு சுடுகாடாகது போல?. இன்னும் கொஞ்சம் இந்த கதையை உற்று நோக்கினால் நம்ம உலகநாயகன் கமலின் ”நாயகன்” படத்தினுடைய கதை போலவே காலா இருக்கிறதாக தோன்றுகிறது. படம் ரிலீசாகும் போது தெரியும் உண்மை கதை என்ன என்று.

No comments

Powered by Blogger.