சீனா­வுக்கு ஒப்­பந்­தம் செய்யும் சுவா­மி­நா­தன்?

வடக்கு, கிழக்­கில் போரால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு 40 ஆயி­ரம் வீடு­களை அமைத்­துக் கொடுக்­கும் ஒப்­பந்­தம் சீன நிறு­வ­னத்­துக்கு வழங்­கப்­பட்­டது சரி­யான நட­வ­டிக்­கையே என்று அமைச் சர் டி.எம்.சுவா­மி­நா­தன் தெரி­வித்­துள்­ளார்.

வடக்கு, கிழக்­கில் வீடு­களை அமைக்­கும் பணி சீன நிறு­வ­னத்­துக்கு வழங்­கப்­பட்­டமை குறித்து இந்­தியா கவலை வெளி­யிட்­டுள்­ளது என்று செய்­தி­கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.
இது தொடர்­பா­கக் கருத்து வெளி­யிட்­டுள்­ளார் மீள்­கு­டி­யேற்ற, புனர்­வாழ்வு, வடக்கு அபி­வி­ருத்தி, இந்து சமய விவ­கார அமைச்­சர் டி.எம்.சுவா­மி­நா­தன்.
மிக­வும் கவ­ன­மாக ஆரா­யப்­பட்ட பின்­னரே, சீன நிறு­வ­னத்­துக்கு இந்த ஒப்­பந்­தம் வழங்­கப்­பட்­டது. சீன ரயில்வே பெய்­ஜிங் பொறி­யி­யல் குழும நிறு­வ­னத்­தி­டமே இந்தத் திட்­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.
இரண்டு ஆண்­டு­க­ளில் இந்­தத் திட்­டத்தை நிறை­வேற்­றித் தரு­வ­தாக சீன நிறு­வ­னம் உடன்­பட்­டுள்­ளது.
போரால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு அவ­ச­ர­மா­கத் தேவைப்­ப­டும் வீடு­களை விரை­வாகப் பெற்­றுக் கொடுக்க இது உத­வும்.
போரால் இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்கு ஒரு லட்­சத்து 60 ஆயி­ரம் வீடு­கள் தேவைப்­ப­டு­கின்­றன. இந்­தப் பின்­ன­ணி­யில் தான், சீன நிறு­வ­னத்­து­டன் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டது.
இந்த வீடு­களை அமைக்­கும் பணிக்கு வடக்கு, கிழக்­கைச் சேர்ந்த 7 ஆயி­ரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்­கப்­ப­டும் – என்­றார்.
Powered by Blogger.