வெளிநாட்டு பணத்தினால் யாழில் கணவன் தற்கொலை!

வெளிநாட்டிலிருந்து பணம் வருவதால் மனைவி தன்னுடன் சந்தோசமாக இருப்பதில்லை. அதனால் எனக்கு வாழ பிடிக்காமல் தற்கொலை செய்கிறேன் என எழுதி வைத்துவிட்டு குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். 

இந்த அதிர்ச்சி சம்பவம் நேற்று முன்தினம் நள்ளிரவு 2.30 மணியளவில் தென்மராட்சியில் நடந்துள்ளது.
சங்கத்தானை சங்கம் ஒழுங்கையை சேர்ந்தவர் சிவராசா சிவரூபன். 47 வயதான இவரே இப்படி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இவர் நான்கு பிள்ளைகளின் தந்தை. கொடிகாமம் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிகிறார். கடிதத்தில் இப்படி குறிப்பிடப்பட்டுள்ள போதும், அவருக்கு ஏற்பட்ட மூல வருத்தமும் தற்கொலைக்கு காரணமாக இருக்கலாமென விசாரணையில் தெரியவந்துள்ளது. 
இவரது மனைவியின் சகோதரர்கள் வெளிநாட்டிலிருக்கிறார்கள். யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டு, சடலம் நேற்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
Powered by Blogger.