போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தவா?? இதெல்லாம் அரசியலப்பா?

போதை பொருள் பாவனையை வடக்கிலிருந்து முற்றாக ஒழிக்கவேண்டும் அதற்காக அரசியல் தலைவர்களும்
பொதுமக்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கூட்டாக கூறியுள்ளனர்.

மாணவி றெஜினா படுகொலையை கண்டித்து இன்று காலை சுழிபுரத்தில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியிருந்தார்கள் இதன்போது போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த நா டாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிரா ஜா குழந்தை படுகொலை செய்யப்பட்டமை மன வருத்தத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது.

இக் கொலை இடம்பெற்றது என்பதன் உண்மை இன்னமும் தெரியவரவில்லை. ஆனாலும் இந்நிலையில் மக்களால் நடாத்தப்படும் போராட்டம் நியாயமானதும் தேவையானதும் கூட.

இச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களது பிணைக்கான காரணம் தொடர்பில் சட்டத்துறையினர் மீள பரிசிலனை செய்ய வேண்டும்.

மேலும் இப் பிரதேசம் உட்பட வடக்கில் பரவியுள்ள கஞ்சா, மது போதைப் பொருட்களை கட்டுபடுத்த மக்களும் அரசியல்வாதிகளும் இணைந்து அனைவரது ஆதரவுடனும் செயற்பட்டாலேயே இதனை கட்டுபடுத்த முடியும்.

மேலும் போதைப் பொருள் சட்டவிரோத மது உற்பத்தி என்பன தொடர்பான பிரச்சனைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக சட்ட ஒழுங்கு அமைச்சருடனும் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

அத்துடன் மக்களின் கோரிக்கைக்கு அமைவாக  யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு பொலிஸ் காவலரன் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்து தருகின்றோம் என்றார்.

தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவிக்கையில்,

இப் போதைப் பாவனை பிரச்சனை என்பது இங்கு மாத்திரம் காணப்படவில்லை. இது தமிழர்கள் வாழ்கின்ற அனைத்து பிரதேசங்களிலும் காணப்படுகின்றது.

எனவே இதனை தடுப்பதற்கு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டியதுடன் அரசியல் கட்சிகளும் கட்சி பேதமின்றி பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றினைந்து இப் பிரச்சனைக்கான தீர்வு நோக்கி பயணிக்க வேண்டும்.

அவ்வாறு பெற்றுக்கொள்ளப்படுகின்ற தீர்வே இக் கொல்லப்பட்ட இச் சிறுமிக்கான நீதியாக அமையும் என்றார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.