தமிழரின் மனங்களை அரசியல் திருத்தம் மூலம் வெல்லமுடியாது!

சட்டத்தின் மூலமோ, அரசியல் திருத்தங்கள் மூலமோ தமிழ் மக்களின் மனங்களை வென்றுவிட முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.


பௌர்ணமி தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலில் நேற்று (புதன்கிழமை) பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், “தமிழ் மக்களுடன் நான் இங்கே வாழ்ந்து வருகின்றேன். அவர்களின் கலாச்சாரம் மனித நேயம், மனிதத் தன்மை அவர்களின் துன்பங்கள் அனைத்தையும் நன்கு புரிந்து கொண்டிருக்கின்றேன்.

அவர்களுக்குத் தேவை கருணை, இரக்கம் பரிவு ஆகியவையே. அதனைவிடுத்து சட்டத்தின் மூலமோ, அரசியல் திருத்தங்கள் மூலமோ அவர்களின் மனங்களை வென்றுவிட முடியாது. இதனை நாடு பூராகவும் தெளிவுபடுத்த வேண்டும்.

இரு தரப்புக்கிடையில் யுத்தம் நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால் யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்ட பின்னர் கையில் இருக்க வேண்டியது துப்பாக்கியல்ல. அது சமாதான ஒளி விளக்காகவே இருக்கவேண்டும்” என்று தெரிவித்தார். 
Powered by Blogger.