சி.வி. விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது!

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.


பொது மக்கள் முன்னிலையில், கருத்து தெரிவித்த அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“என்னுடைய தனிப்பட்ட கருத்து விக்னேஸ்வரன் ஐயா அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது. அவர் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட வேண்டும். அவர் தொடர்ந்தும் ஆக்கப்பூர்வமான செயல்களை முன்னெடுக்க வேண்டும்.

இந்நிலையில், தமிழினத்திற்கு தொடர்ந்தும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமை வகிக்க வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.