இலங்கை மகளிர் அணி வெற்றி!

ஆசிய மகளிர் ரி-ருவன்ரி வெற்றிக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிராக 03.06.2018

நடைபெற்ற போட்டியில் இலங்கை மகளிர் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறும் வெற்றிக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 63 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 14.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதி செய்தது.
பந்து வீச்சில் இலங்கையின் வீராங்கனை சுகந்திகா குமாரி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Powered by Blogger.