தமிழ் பெண் இலங்கை திரும்பி சென்றவுடன் ஏற்பட்டவிபரிதம்!

இலங்கையில் தமிழ் பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கிருலப்பனை பிரதேசத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைக் குற்றத்திற்காக அவருக்கு இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த தண்டனையை நீதிபதி ஏ.ஏ.ஆர்.ஹெய்யன்துடுவ வழங்கியுள்ளார்.

இந்த வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பெண்ணுக்கு 2013ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பு வழங்கியது.

எனினும் வெளிநாட்டில் தலைமறைவாகி இருந்த குறித்த தமிழ் பெண் நாட்டுக்குத் திரும்பியதை அடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இதையடுத்து 2013ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கமைய நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு, கிருலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த முத்துச்சாமி சரஸ்வதி என்ற பெண்ணுக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

1995ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி கிருலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த அமரசிங்க என்ற நபரை கத்தியால் குத்தி கொலைசெய்த குற்றத்துக்காக அந்த பெண்ணுக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.