பிரபுதேவாவின் அடுத்த படத்தில் விஜய் பட பகைவன்!

நடிகர் பிரபுதேவா நடித்த ‘குலேபகாவலி’ திரைப்படம் கடந்த சில
மாதங்களுக்கு முன்னர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் ஏசி முகில் என்பவர் இயக்கவுள்ளார். ஆக்சன் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த படத்தை நேமிசந்த் ஜெபக் தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது மூன்று பிரபலங்கள் இணைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் விஜய் நடித்த ‘தெறி’ படத்தில் பகைவனாகக நடித்த
பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் ஆவார். இவர் இந்த படத்தில் குணசித்திர வேடத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில்
நடிகை நிவேதா பேத்ராஜ் மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோர்களும் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஆக்சன், த்ரில் மற்றும் நகைச்சுவை என அனைத்தும் கலந்த ஒரு கமர்ஷியல் படமாக இந்த படம் உருவாகி வருவதாகவும், பிரபுதேவாவின் ரசிகர்களை திருப்திபடுத்தும் அட்டகாசமான டான்ஸ் ஒன்றும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Powered by Blogger.