சகோதரர்களே! உங்களது கோரிக்கை நியாயமானதா?

நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர்களது கோரிக்கை நியாயமற்றது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

நீர் வழங்கல் நீர் விநியோக அமைச்சினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் கடந்த மூன்றாண்டுகளில் 50 வீத சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான ஓர் பின்னணியில் மேலும் சம்பள உயர்வு வழங்குமாறு கோருவது நியாயமானதா? என தொழிற்சங்கங்களிடம் கேள்வி எழுப்புகின்றேன்.

அமைச்சினை பொறுப்பேற்றுக் கொண்ட போது 30 வீத சம்பள உயர்வும் பின்னர் அண்மையில் 20 வீத சம்பள உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் குறித்து தொழிற்சங்க சகோதரர்கள் நியாயமான முறையில் சிந்திக்க வேண்டும் என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 
Powered by Blogger.