காலா படத்துக்கு பாதுகாப்பு கோரி நடிகர் விஷால் கடிதம்!

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் நாளை வெளியாகிறது. வெளிநாடுகளில் காலா படம் ஒருநாள் முன்னதாகவே வெளியிடப்பட்டது. 

இதற்கிடையே, காலா படத்தை பேஸ்புக் லைவ் மூலம் நேரடியாக சுமார் 40 நிமிடம் ஒளிபரப்பு செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்க தலைவரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காலா படத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடக முதல் மந்திரி குமாரசாமிக்கு நடிகர் விஷால் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், கர்நாடகாவில் காலா படம் வெளியாவதை உறுதி செய்து, திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களுக்கு பாதுகாப்பு வழங்குங்கள்.
முதல் மந்திரி குமாரசாமி எடுக்கும் முடிவு தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என குறிப்பிட்டிருந்தார். 

No comments

Powered by Blogger.