வடகிழக்கில் சீனாவின் வீட்டு திட்டமும் வசைபாடும் சம்பந்தரும்!

"வடகிழக்கில் அமையும் 40,000 வீட்டு திட்டம் சீனாவின் திட்டம் என்று தமக்கு தெரியப்படுத்தப்படவில்லை" என சம்பந்தர் கூறுகிறார்.

தெரியப்படுத்தினால் இந்திய விசுவாசம் அவரை இந்த திட்டத்தை எதிர்க்க வைத்திருக்குமோ?
சீனாவை கட்ட விடமாட்டோம் எம் மண்ணில் என சொல்லும் அதிகாரத்தை இந்தியாவுக்கு கொடுத்தது யார்?
தமிழர்களை அழித்து தமிழினத்தை அழிக்க துணை நின்று தமிழரோடு பகையை நிலை நாட்டும் இந்தியாவாவது தமிழ் மக்களுக்கு நன்மை செய்வதாவது...
தானும் உதவாமல் அடுத்தவர்களுக்கு உதவ விடாமல் என்னே ஒரு பெரியண்ணை நாட்டாண்மை!
மறந்தும் வேறு நட்டால் கூட நன்மைகள் தமிழ் மக்களுக்கு வந்துவிட கூடாது என்ற அழுக்கு சிந்தை தான் இந்திய சிந்தையாக இருக்க முடியும்.
உதவி என வருபவர்கள் எல்லோரும் நல்ல நோக்கிலா வருகிறார்கள்?
நீ முந்தி நான் முந்தி என தமிழர்கள் நிலங்களை ஆக்கிரமித்து வளங்களை சுரண்ட தானே எல்லோரும் முந்தியடிக்கின்றார்கள்.
முதலில் இந்தியா தனது நாட்டில் தமிழகத்தில் 8 வழி சாலை என்ற பெயரில் தமிழ் மண்ணில் தமிழக உறவுகளிடம் பறிக்கின்ற விவசாய காணிகளை பறிக்காமல் விட்டு கொடுக்கட்டும். அதன் பின்பு ஈழத்தில் தமிழ் மக்களுக்கு வீடு கட்டட்டும்!

No comments

Powered by Blogger.