மோசடியாளர்களை ஜனாதிபதி அம்பலப்படுத்த வேண்டும்!

அர்ஜுன் அலோசியசிடமிருந்து பணம் பெற்றுக் கொண்ட 118 பேரின் பெயர்ப் பட்டியலை வெளிப்படுத்தும் முழுமையான அதிகாரம்

ஜனாதிபதிக்கே உள்ளது எனவும், ஜனாதிபதி இதனை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்காது போனால் சந்தேகம் ஜனாதிபதியின் மீதே விழும் எனவும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார்.

இந்த பெயர்ப்பட்டியலை வெளியிடுவதில் சட்டரீதியாக எந்தவிதமான தடையும் இல்லை. அரசாங்கும் பந்தை ஒவ்வொருவரிடமும் மாற்றிக் கொண்டு செல்கின்றது. சபாநாயகர் ஜனாதிபதியின் செயலாளரிடம் கேட்கின்றார். ஜனாதிபதியின் செயலாளர் சட்ட மா அதிபரிடம் கேட்கின்றார். இவ்வாறு இழுத்தடிப்புக்கள் இடம்பெறுகின்றன.

நாம் ஜனாதிபதியிடம் கேட்கின்றோம். தற்பொழுது தங்களது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தும் சந்தர்ப்பம் வந்துள்ளது. அதனைப் பயன்படுத்தியாவது பாராளுமன்றத்திலுள்ள உறுப்பினர்களின் கௌரவத்தைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் கம்மம்பில எம்.பி. மேலும் கூறினார் 

No comments

Powered by Blogger.