மக்­க­ளி­டம் கையேந்­தும் வடக்கு மாகாண அரசு!

வடக்கு மாகாண சபை­யி­டம் நிதி வளம் மிகக் குறை­வா­கவே காணப்­ப­டு­வ­தால், தற்­போது சபை பொது­மக்­க­ளி­டம் பங்­க­ளிப்­பைக் கோரி­யுள்­ளது. மலை­போல் குவிந்­துள்ள வேலை­க­ளைச் செய்­து­மு­டிக்­கவே பொது­மக்­க­ளின் பங்­க­ளிப்பை – நன்­கொ­டை­யைச் சபை கோரி­யுள்­ளது. இந்­தக் கோரிக்­கையை வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நேற்­றுப் பகி­ரங்­க­மாக விடுத்­தார்.

வடக்கு மாகாண சபை­யி­டம் நிதி வளங்­கள் மிகக் குறை­வா­கவே காணப்­ப­டு­கின்­றன. ஆனால் முழுமை செய்­யப்­ப­ட­வேண்­டிய வேலை­களோ மலை­ய­ள­வா­கக் குவிந்­தி­ருக்­கின்­றன. ஆகவே கிராம அபி­வி­ருத்தி தொடர்­பான வேலை­க­ளில் மக்­க­ளின் பங்­க­ளிப்­புக்­களை நாங்­கள் நாடி நிற்­கின்­றோம். அவை போதி­ய­ளவு கிடைக்­கப் பெறு­கின்­ற­போது அபி­வி­ருத்­திப் பணி­கள் சிறப்­புற நடை­பெ­றும்” என்று முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

பேசாலை கடற்­க­ரைப் பூங்கா, 2017ஆம் ஆண்டு பி.எஸ்.டி.ஜி நிதி ஒதுக்­கீட்­டின் கீழ் சுமார் 3.9 மில்­லி­யன் ரூபா செல­வில் அழ­கு­ப­டுத்­தப்­பட்டு மக்­கள் பாவ­னைக்­காக வைபவ ரீதி­யாக நேற்­றுக் கைய­ளிக்­கப்­பட்­டது. இந்த நிகழ்­வில் உரை­யாற்­று­கை­யில் முத­ல­மைச்­சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:



சுற்­றுலா மையங்­கள் கூடு­த­லா­கக் காணப்­ப­டு­கின்ற மன்­னார்ப் பிர­தே­சத்­தில் இன்­னும் பல அபி­வி­ருத்தி வேலை­களை மேற்­கொள்­வ­தற்­குத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­போ­தும் உரிய நிதி­மூ­லங்­கள் கிடைக்­கா­மை­யால் அவை தடைப்­பட்­டுள்­ளன. இந்த வேலை­கள் நிச்­ச­ய­மாக அடுத்த அடுத்த ஆண்­டு­க­ளில் ஆரம்­பிக்­கப்­ப­டும்.

சுமார் 30 ஆண்­டு­கால தொடர்ச்­சி­யான போரின் விளை­வாக வட­ப­கு­தி­யின் வளங்­கள் அனைத்­தும் முடக்­கப்­பட்ட நிலை­யில், எமது மக்­கள் எது­வித அபி­வி­ருத்­தி­க­ளும் இன்றி வாழ­வேண்­டிய ஒரு நிர்ப்­பந்­தத்­துக்கு உள்­ளாக்­கப்­பட்ட நிலை­யில், வீடு­க­ளுக்­குள் முடங்­கிக்­கி­டக்க வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. இந்த நிலை மாற்­றப்­பட்டு மக்­கள் சுய­மாக இயங்­கக்­கூ­டிய இன்­றைய நிலை­யில் சுற்­று­லாத்­துறை தொடர்­பான ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டு­களை வடக்கு மாகா­ண­சபை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றது.

சுற்­று­லாத்­து­றைக்­கான நிய­திச் சட்­டங்­கள் அனைத்­தும் தயா­ரிக்­கப்­பட்டு முறை­யாக அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தக் கடற்­க­ரைப் பூங்கா இந்­தப் பகு­தி­யில் வாழும் மக்­க­ளுக்­கும், இங்கு வருகை தரும் சுற்­று­லாப் பய­ணி­க­ளுக்­கும் மாலை வேளை­க­ளில் அமர்ந்­தி­ருந்து காற்று வாங்­கு­வ­தற்­கும், நடைப் பயற்சி, தேகப் பயிற்சி போன்ற பயிற்­சி­க­ளைச் செய்­வ­தற்­கும்­ஏற்­ற­வை­யாக இருக்­கும்.

ஒவ்­வொரு சுற்­றுலா மைய­மும்­அந்­தந்­தப் பகு­தி­க­ளுக்கு வரு­வா­யைத் தேடிக் கொடுப்­ப­து­டன் பொரு­ளா­தார நிலை­யில் நலிந்த நிலை­யி­லுள்ள அந்­தப் பகுதி மக்­கள் தமது பொரு­ளா­தா­ரத்தை விருத்தி செய்­யக்­கூ­டிய வகை­யில் ஒழுங்­கு­களை மேற்­கொள்­ள­மு­டி­யும்.

உதா­ர­ண­மாக பேசாலை கடற்­க­ரைப் பூங்­கா­வில் மக்­கள் அதி­கம் கூடு­கின்­ற­போது இந்­தப் பகு­தி­க­ளில் சுண்­டல், கடலை வியா­பா­ரம் மற்­றும் சிற்­றுண்டி வியா­பா­ரங்­கள், தேனீர் வியா­பா­ரங்­கள் போன்ற பல வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்கு நல்ல மவுசு ஏற்­ப­டும். அதே­போன்று இவ்­வா­றான கடற்­க­ரை­க­ளில் உள்ள தனி­யார் நிலங்­க­ளில் அந்த நிலச் சொந்­தக்­கா­ரர்­கள் அழ­கான சிறிய குடில்­களை சட்­டப்­படி அமைத்து அதனை சுற்­று­லாப் பய­ணி­க­ளின் பாவ­னைக்­காக குறைந்த வாட­கைக் கட்­ட­ணத்­தில் கைய­ளிக்­கின்ற போது சுற்­று­லாப் பய­ணி­க­ளின் வருகை அதி­க­ரிக்­கும்.

பேசா­லை­யைப் பொறுத்த வரை­யில் வரு­டத்­தின் 12 மாதங்­க­ளும் அவர்­க­ளுக்கு வாய்ப்­பான மாதங்­களே என்று நம்­பு­கின்­றேன். இங்கு கடல் உண­வு­க­ளுக்கு பஞ்­ச­மில்லை. ஆத­லால் இந்­தப் பகு­திக்கு வரு­கின்ற சுற்­று­லாப் பய­ணி­கள் கடல் உண­வு­க­ளில் தயா­ரிக்­கப்­பட்ட சுத்­த­மும் சுகா­தா­ர­மும் நிறைந்த உள்­ளூர் உணவு வகை­களை விரும்­பி­அ­ருந்த வழி­வ­கை­களை உண்­டு­பண்­ண­லாம்.

சார­தி­கள் கவ­ன­மில்லை
வீதி­கள் சீர­மைப்­புச் செய்­யப்­பட்டு காப்­பெட் வீதி­க­ளாக மாற்­றப்­பட்ட பின்­னர் 1½ மணித்­தி­யா­லங்­க­ளில் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து பேசா­லைக்கு வரக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது. அதே­போன்று பேசாலை – கொழும்­புப் பிர­யா­ண­மும் இல­கு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. வீதி­கள் செப்­ப­னி­டப்­பட்ட பின்­னர் பிர­யா­ணம் இல­கு­வாக்­கப்­பட்­டது. ஆனால் வீதி விபத்­துக்­கள் இங்கு அதி­க­ரித்­துள்­ளன என்று அறி­கின்­றேன். இது கவ­லைக்­கு­ரி­யது. சார­தி­கள் வீதி ஒழுங்­கு­களை முறை­யா­கக் கவ­னிக்­காத கார­ணத்­தா­லேயே இந்த விபத்­து­கள் ஏற்­ப­டு­கின்­றன – என்­றார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.