ஆப்கானிஸ்தான் துணை அதிபரை வரவேற்ற நிகழ்ச்சியில் குண்டு வெடிப்பு - 11 பேர் பலி

ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அப்துல் ரஷீத் தோஸ்தும் போர்குற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த ஓராண்டுக்கும் மேலாக துருக்கி நாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்திருந்தார்.

இன்று தாய்நாடு திரும்பிய அப்துல் ரஷீத் தோஸ்தும்-ஐ வரவேற்க காபுல் நகரில் உள்ள ஹமித் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் ஏராளமான ஆதரவாளர்களும், இரண்டாம் துணை அதிபர் சர்தார் தனிஷ் மற்றும் ஏராளமான அரசு அதிகாரிகளும் திரண்டிருந்தனர்.

துணை அதிபர் அப்துல் ரஷீத் தோஸ்தும் வந்த தனி விமானம் மாலை 4.30 மணியளவில் தரையிறங்கியதும், அவரது ஆதரவாளர்கள் உற்சாக மிகுதியில் முழக்கங்களை எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர்.

ஆதரவாளர்களின்  வரவேற்பை ஏற்ற பின்னர் துணை அதிபரின் கார் மற்றும் அவருக்கு பாதுகாப்பாக சென்ற வாகனங்கள் சுமார் 5 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றன.அப்போது, காபுல் விமான நிலைய வாசலில் பயங்கரமான குண்டு வெடிக்கும் சப்தம் கேட்டது. மனிதகுண்டு தாக்குதல் என நம்பப்படும் இந்த குண்டு வெடிப்பில் பாதுகாப்பு படையினர் உள்பட 11 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.