13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டர் - மதுரையில் கொடூரம்.!

கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் ரீதியிலான குற்றச்சம்பவங்கள் ஓய்ந்தபாடில்லை. அனுதினமும் பெண்களுக்கெதிரான குற்றச்சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்துகொண்டிருப்பதுடன், கேட்போர்களை அதிர்ச்சியடைய செய்யவும் செய்கின்றன.

அத்தகையதோர் கொடூர சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது. ஆத்திகுளம் பகுதியில் வசித்து வருபவர் திரவியம். இவர் ஓய்வு பெற்ற காவல்துறை சிறப்பு ஆய்வாளர். இவர்தான் இந்த கொடூரத்தினை அரங்கேற்றியுள்ளார். இவரது பக்கத்து வீட்டு பெண்ணுக்கு வயது 13. கடைக்கு சென்றுவிட்டு இன்று மதியம் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார் அந்த சிறுமி.

இந்த சார்பு ஆய்வாளர் வீட்டை தாண்டிதான் அந்த பெண் தன்னுடைய வீட்டுக்கு செல்ல முடியும். அப்போது சார்பு ஆய்வாளர் வீட்டை தாண்டிபோகும்போது, அந்த சிறுமியை கையை பிடித்து வீட்டுக்குள் இழுத்து கொண்டு போய்விட்டார் அந்த ஓய்வுபெற்ற அதிகாரி. தன் வீட்டினுள் தள்ளி கதவையும் சாத்திவிட்டார். பின்பு அந்த பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட தொடங்கினார்.

மிகவும் கீழ்த்தரமான, இழிவான, விவரிக்கவே முடியாத அளவுக்கு அந்த பெண்ணிடம் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த சிறுமி அலறி துடித்தாள். கதவை பூட்டிக்கொண்டு திருட்டுத்தனமான செயலில் ஈடுபட்டால், சிறுமியின் அலறல் அக்கம் பக்கம் வீட்டாரின் காதில் விழுந்தது. பதறியடித்துன் கொண்டு ஓடிவந்த அவர்கள், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து பார்த்தபோதுதான் அந்த அதிகாரியின் கோரமுகம் வெளிப்பட்டது.

உடனடியாக சிறுமியை மீட்டுக்கொண்டனர். அத்துடன், அந்த அதிகாரியை அங்கேயே சரமாரியாக வெளுத்து கட்டினர். உடனடியாக போலீசுக்கும் தகவல் அளித்தனர். சம்பவம் நடந்த இடத்துக்கு டிஎஸ்பியே விரைந்து வந்தார். மிகப்பெரிய தண்டனை தந்தே தீர வேண்டும் என்று ஆத்திரத்துடன், அந்த அதிகாரியை தல்லாகுளம் டிஎஸ்பியிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

திரவியம் காவல்துறையை சேர்ந்த நபர் என்பதால் சரியான நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது கேள்விக்குறியே.

No comments

Powered by Blogger.