சேலம், தர்மபுரியில் லேசான நில அதிர்வு - வீடுகளை விட்டு வீதியில் தஞ்சமடைந்த மக்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. மிகவும் லேசாக உணரப்பட்ட இந்த நில அதிர்வால் பீதியடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் கூடினர்.

இதேபோல, தர்மபுரி மாவட்டத்தின் நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் ஆகிய பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும்போது நில அதிர்வு ஏற்படுவதாக அங்குள்ளவர்களில் சிலர் தெரிவித்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

No comments

Powered by Blogger.