யாழில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசத்தால்13பேர் கைது!

மேற்படி சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, தென்மராட்சி - எழுதுமட்டுவாள் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் இன்று பிற்பகல் மோதல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது சாவகச்சேரியில் இருந்து 13 பேர் கொண்ட வாள்வெட்டு குழு “சாவா குழு” வாகனம் ஒன்றில் எழுதுமட்டுவாளுக்கு சென்றுள்ளது.

இதனை அறிந்த கொடிகாமம் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றிருந்த நிலையில்> குறித்த வாள்வெட்டு குழு அங்கிருந்து தப்பி வடமராட்சி கிழக்கு பகுதிக்குள் சென்றுள்ளனர்.

இதனையடுத்து கொடிகாமம் பொலிஸார் கிளிநொச்சி - பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் பளை பொலிஸார் மேற்படி 13 இளைஞர்களையும் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டபோது குறித்த இளைஞர்களிடம் வாள்கள், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்த நிலையில் அவற்றையும், அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் பளை பொலிஸார் கைப்பற்றி கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.