புதிய வகை பழம் இலங்கையில் அறிமுகம்!

இலங்கையின் உலர் மற்றும் ஈர வலயங்களில் பயிர் செய்யக்கூடிய புதிய பழ வகையை விவசாயத் திணைக்களம் அறிமுகம் செய்துள்ளது.

அகுனுகொலபெலஸ்ஸ, ஏரமினியாய பண்ணையில் இந்தப் பழ வகை வெற்றிகரமான முறையில் பயிரிடப்பட்டுள்ளது.

கெக்ஃபுரூட் என்ற பெயருடைய இந்தப் பழ வகை கரட் இனத்தை விட பத்து மடங்கு கரட் நொய்டிஸ், விட்டமின் ஏ என்பனவற்றை உள்ளடக்கியவையாகும்.

இளம் மரக்கறி வகையாகவும் இதனைப் பயன்படுத்த முடிகின்றமை சிறப்பம்சமாகும். இதனைப் பயன்படுத்தி உணவுகளையும், பழச்சாறையும் தயாரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.