வடமாகாண சபை ஆராய்வதற்காக16ம் திகதி விசேட அமா்வு!

வடமாகாண அமைச்சர் சபையில் பா.டெனீஸ்வரன் அமைச்சராக உள்ளாரா? இல்லையா? எ ன சர்ச்சைகள் எழுந்திருக்கும் நிலையில், மேற்படி விடயம் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட அமர்வை நடத்துமாறு 19 உறுப்பினர்கள் அவை தலைவரை கேட்டுள்ளனர்.


வடமாகாணசபையின் 126வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நே ற்று நடைபெற்றிருந்தது. இதன்போது மாகாண அமைச்சர்கள் யார்? அமைச்சர்கள் எத்தனை பேர்? என சர்ச்சைகள் எழுந்துள்ளது.

இந்நிலையில் மேற்படி விடயம் தொடர்பாக ஆராய்ந்து உரிய தீர்மானம் எடுப்பதற்காக விசேட அமர்வு ஒன்றை நடாத்துமாறு 19 மாகாணசபை உறுப்பினர்கள் கையொப்பமிட்டு அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திடம் கையளித்துள்ளனர்.

இதனை அவைக்கு அறிவித்த அவை தலைவர் பெரும்பான்மை உறுப்பினர்கள் விசேட அமர்வு ஒன்றை நடாத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளமைக்கு அமைவாக விசேட அமர்வு ஒன்றினை நடாத்தலாம் என கூறியதுடன்,

எதிர்வரும் 16ம் திகதி திங்கள் கிழமை விசேட அமர்வு ஒன்றிணை நடாத்த இணக்கம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.