வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 2 இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 2 இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த 2 பேரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் ஒருவரின் வீடு ஒன்றிற்குள் புகைந்து குறித்த இருவரும் தாக்குதல் மேற்கொண்டமை காரணமாகவே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சந்தேக நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Powered by Blogger.