விடுதலைப் புலிகளின் தங்கம் தோண்டிய 5 பேர் கைது!

கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் பதுக்கி வைத்ததாக கூறப்படும் தங்கத்தை தேடிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கிளிநொச்சி பரந்தன் பகுதியில் குறித்த 5 பேரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து பல இலட்சம் பெறுமதியான ஸ்கேனர் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அண்மையில் கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் அதி நவீன ஸ்கானர்களுடன் தமிழீழ விடுதலை புலிகளின் புதையல் தேடிவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.