அபிவிருத்தி இலக்கை 2030ஆம் ஆண்டளவில வெற்றி கொள்ளுவதே இலக்கு!

சமகால அரசாங்கம் நிலைபேறான அபிவிருத்தி இலக்கை 2030ஆம் ஆண்டளவில வெற்றி கொள்ளுவதே இலக்காகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தெற்காசிய நாடுகளின் சபாநாயகர்களின் மூன்றாவது வருடாந்த மாநாடு இன்று காலை ஆரம்பமானது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் இந்த இலக்கை பூர்த்திச் செய்வதற்கு அரசாங்கம் மற்றும் தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் விசேடத் திட்டமொன்றை தேசிய கொள்கையாக இனங்காணப்பட்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

பிரதமர் தலைமையில் இந்த மாநாடு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் வரவேற்புரையை இலங்கையின் சபாநாயகர் கரு ஜயசூரிய வழங்கினார்.


சிறிய மற்றும் மத்திய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கில் விசேட கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயல் திட்டத்தை கண்காணிப்பதற்கு பாராளுமன்றத்தில் விசேட கண்காணிப்புக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டளவில் இந்த இலக்குகளை அடைய எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.