இடியாப்பச் சிக்கலில் களவாணி 2!

சினிமாவில் நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்கள் பணத்தேவைகளுக்கு பைனான்சியர்கள் வழங்கும் கடன் பத்திரங்கள், காசோலைகளில் கையெழுத்திட்டு வழங்குவது வழக்கம்.
நடிகர் விமல் அப்படி கையொப்பமிட்டுக் கொடுத்த ஆவணம் ஒன்று அவர் நாயகனாக நடித்துவரும் களவாணி 2 படத்தின் வியாபாரப் பேச்சுவார்த்தைகளைச் சிக்கலுக்கு உள்ளாக்கியிருக்கிறது.
விமல் தயாரித்து நடித்த மன்னர் வகையறா படத்தை வெளியிடும் நேரத்தில், பணத்தேவைக்காக அரசு பிலிம்ஸ் நிறுவனத்திடம் அவர் கையெழுத்திட்டுக் கொடுத்த ஆவணம்தான் அது.
அரசு பிலிம்ஸ் உரிமையாளர் கோபி, “களவாணி 2 படம் விமல் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுத் தொடங்கிய படம். மன்னர் வகையறா படத்தை வெளியிட என்னிடம் பணம் வாங்கியபோது களவாணி 2 படத்தின் உரிமையை அடமானமாக எழுதிக் கொடுத்துள்ளார். எனவே அப்படத்தினை வியாபாரம் பேசும் முன் என்னைத் தொடர்புகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இது சம்பந்தமாக களவாணி 2 படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான சற்குணம், “இப்படத்தின் தயாரிப்பாளர் நான் மட்டுமே. இதற்கும் நடிகர் விமல் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசு பிலிம்ஸ் கோபி - விமல் இருவருக்கும் இடையில் உள்ள கொடுக்கல், வாங்கல் களவாணி 2 படத்தைக் கட்டுப்படுத்தாது” என அறிவித்துள்ளார்.
கோபி - சற்குணம் இருவரது அறிவிப்பும் களவாணி - 2 படத்தின் வியாபாரத்தைச் சிக்கலுக்கு உள்ளாக்கியிருக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.