மதுபோதையில் நடந்த கொடுரம்! 2 மகன், மனைவி துடிதுடித்துப் பலி..


தஞ்சை அருகே மதுபோதையில் மண்வெட்டியால் தந்தை தாக்கியதில் 2 மகன்கள் துடிதுடித்து உயிரிழந்தனர். படுகாயமடைந்த மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தஞ்சை அன்னப்பன் பேட்டையை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 9 வயதில் தினேஷ் என்ற மகனும் 7 வயதில் தருண் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் மதுவுக்கு அடிமையான ஜெயக்குமார் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

மண்வெட்டியால் தாக்கிய தந்தை

இந்நிலையில் மதுபோதையில் இருந்த ஜெயக்குமார் மனைவி அனிதாவை மண்வெட்டியால் தாக்கியுள்ளார். அப்போது சிறு பிள்ளைகளான தினேஷும் தருணும் தாயை காப்பாற்ற தந்தையை தடுத்துள்ளனர்.

பலத்த காயமடைந்த சிறுவர்கள்

அப்போது குழந்தைகளை மண்வெட்டியால் தாக்கியுள்ளார் ஜெயக்குமார். இதில் இரண்டு சிறுவர்களும் பலத்த காயமடைந்தனர்.

2 குழந்தைகளும் பலி

ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 2 சிறுவர்களும் உயிரிழந்தனர். தாயும் பலி இதையடுத்து படுகாயங்களுடன் போராடிய சிறுவர்களின் தாய் அனிதாவை அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் தாய் அனிதாவும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

அதிர்ச்சியும் சோகம்

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான தந்தை ஜெயக்குமாரை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.