7 மாத கர்ப்பிணியின் வயிற்றில் உதைத்த சத்துணவு அமைப்பாளர் ; காரணம் இதுதான்.!
ஊழலும், லஞ்சமும் தமிழக அரசின் எல்லா மட்டங்களிலும் பரவிகிடக்கிற நிலையில், அதனை எதிர்ப்பவர்கள் ஏமாளிகளாக பார்க்கப்படுவதுடன் - பிழைக்க தெரியாதோர் என கேலி ; கிண்டல்களுக்கு உள்ளாகின்றனர்.
மேலும்,ஊழல் வாதிகளின் கடுமையான எதிர்பினையும் அவர்கள் சம்பாதித்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஆம், அப்படியானதோர் நிகழ்வு நாமக்கல் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
ராசிபுரம் பாரதிதாசன் சாலையில் உள்ள நகராட்சி அங்கன்வாடி மையத்தில், தனலட்சுமி என்பவர் சமையலராக பணியாற்றி வருகிறார்.
7 மாத கர்ப்பிணியான தனலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் உமா முட்டை, அரிசி உள்ளிட்ட சத்துணவுப் பொருட்களை வெளியில் விற்பதாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், இதுதொடர்பாக இவர்களிடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தில், தனலட்சுமியை சத்துணவு அமைப்பாளர் உமா வயிற்றில் உதைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர் ஆபத்தான நிலையில் ராசிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சேலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை