யப்பானில் 36 வருடங்களின் பின் 200 இற்கு மேற்பட்டோர் உயிரிழப்பு!

36 வருடங்களின் பின் யப்பானில் மிக பலத்த மழை பெய்து வருவதால் நகரின் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதுவரை 86 இலட்சம் பொதுமக்கள் வெளியேறி உள்ளனர். முழை காரணமாக இதுவரை சுமார் 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர்.
யப்பானில் 1982-ம் ஆண்டு பலத்த மழை பெய்ததினால் ஏற்பட்ட வெள்ளத்தால் கடும் சேதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒகாயமா ஹிரோஷிமா யாமாகுச்சி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் ,இவற்றில் ஒகாயமா பகுதி முழுவதும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.பெரும்பாலான இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதுடன் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றது.

இதனால் மக்கள் அங்கு வசிக்க முடியாமல் வெளியேறி வருகிறார்கள். இதுவரை 86 இலட்சம் பேர் வெளியேறி உள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ் வெள்ளநிலமை காரணமாக போக்குவரத்து முற்றிலும் முடங்கப்பட்டுள்ளது. மின் கம்பங்களும் சாய்ந்து விட்டன. இதன் காரணமாக பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக 70 ஆயிரம் மீட்பு படையினர் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வீதிகள் துண்டிக்கப்பட்டு இருப்பதால் மீட்பு பணி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.