அபிவிருத்தி இலக்கை பூர்த்தி செய்வதில் அனைத்து தரப்பினருக்கும் பொறுப்புண்டு!

நிலையான அபிவிருத்தி இலக்கை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் போது அனைவருக்கும் ஒரே மாதிரியான பொறுப்புள்ளது.
இதற்காக சிவில் சமூக அமைப்புகள், நிபுணர்கள், வணிக சமூகம் மற்றும் சர்வதேச அபிவிருத்தி நிறுவங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற கட்டிட தொகுதியில் நேற்று ஆரம்பமான தெற்காசிய நாடுகளின் சபாநாயகர்களின் மூன்றாவது வருடாந்த மாநாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு வரவேற்புரையை நிகழ்த்தியபோதே சபாநாயகர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு கருத்து தெரிவித்த சபாநாயகர் , ஆசிய மற்றும் பசுபிக் வலயத்தின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு வருடத்திற்கு றில்லியன் அமெரிக்க டொலர் தேவை என ஆசிய அபிவிருத்தி வங்கி மதிப்பீடு செய்துள்ளது.

இருப்பினும் இந்த பிராந்திய நாடுகளுக்காக வழங்கப்படும் அபிவிருத்தி நிதி 30 பில்லியன் அமெரிக்க டொலர் மாத்திரமே என்று சுட்டிக்காட்டினார். அதனால் எமது பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் வளங்களை அபிவிருத்தி செய்வது முக்கியமாகும்.

மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் எமது பொறுப்பானது வரவு செலவு திட்டத்தின் போது செயற்திறனுடனும் , ஒழுங்குமுறையுடனும் முன்னெடுப்பது முக்கியமானதாகும் என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.