கிளிநொச்சியில்500வது நாள் போராட்டம் கண்ணீரால் நிறைந்தது!(படங்கள்)

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று 500வது நாள் போராட்டத்தினை கவன ஈர்ப்பு போராட்டமாக முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்றது.

ஏ9 வீதியில் குறித்த கவன ஈர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று 500வது நாளாக இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை
குறிப்பிடதக்கதாகும். குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலிருந்தும் காணாமல்

ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் அமைப்புக்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது அரசியல்வாதிகள் சிலரும் அங்கு சமூகமளித்திருந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Powered by Blogger.